பிரதமர் மோடியை சந்தித்து ஆசி பெற்ற விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா தம்பதி

நடிகர் விஜய் தேவரகொண்டா - நடிகை ராஷ்மிகா மந்தனா இருவருக்கும் நேற்று உதய்பூரில் திருமணம் நடைபெற்றது.
பிரதமர் மோடியை சந்தித்து ஆசி பெற்ற விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா தம்பதி
Published on

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்கள் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா. இருவருமே காதலித்து வந்தாலும், வெளிப்படையாக தங்களுடைய காதலை அறிவிக்காமல் மறைத்து வந்தனர். இருந்தாலும் இவர்களின் காதல் பற்றிய செய்திகள் அவ்வப்போது வெளியாகி வந்தது.

சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் திருமணம் செய்து கொள்ள உள்ளதை அதிகாரபூர்வமாக அறிவித்தனர். தங்கள் திருமணத்துக்கு The Wedding of ViRosh என்று பெயரிட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ViRosh என்பது விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா ஆகிய பெயர்களின் சுருக்கமாக ரசிகர்கள் தங்களுக்கு சூட்டியதால் அதை பயன்படுத்தி உள்ளதாக தெரிவித்தனர்.

நேற்று காலை 10 மணிக்கு உதய்பூரில் உள்ள ஐடிசி மொமண்ட்ஸ் ஹோட்டலில் விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனா இருவரது திருமணமும் நடைபெற்றது. ரஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். இந்த ஜோடிக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா தம்பதியினர் இன்று சந்தித்து ஆசி பெற்றனர் , வரும் மார்ச் 4-ம் தேதி நடைபெற உள்ள தங்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை மோடியிடம் வழங்கினர்.

ஐதராபாத்தில் வரும் 4-ந்தேதி நடைபெற உள்ள விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா திருமண வரவேற்பில் சினிமா, அரசியல் பிரபலங்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com