'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம் வெற்றி பெற வேண்டி நடிகர் ராகவா லாரன்ஸ் சாமி தரிசனம்!

ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ’ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது.
'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம் வெற்றி பெற வேண்டி நடிகர் ராகவா லாரன்ஸ் சாமி தரிசனம்!
Published on

சென்னை,

'ஜிகர்தண்டா' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' என பெயரிடப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படம் தீபாவளி விடுமுறையையொட்டி திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம் வெற்றி பெற வேண்டி, திருவொற்றியூரில் உள்ள தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோவிலில் நடிகர் ராகவா லாரன்ஸ் சாமி தரிசனம் செய்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com