நெட்பிளிக்ஸ் சி.இ.ஓ உடன் மதிய உணவு அருந்திய ஜூனியர் என்.டி.ஆர்...!

ஆஸ்கர் அகாடமியின் நடிகர்கள் குழுவின் ஒரு உறுப்பினராக ஜூனியர் என்.டி.ஆர் சேர்க்கப்பட்டுள்ளார்.
நெட்பிளிக்ஸ் சி.இ.ஓ உடன் மதிய உணவு அருந்திய ஜூனியர் என்.டி.ஆர்...!
Published on

ஐதராபாத், 

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆர். ராஜமவுலி இயக்கிய 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தில் நடித்ததன் மூலம் உலகப்புகழ் பெற்றார். இவரது நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் நாட்டு நாட்டு பாடல் உலகம் முழுவதும் பேராதரவைப் பெற்றதுடன், ஆஸ்கர் விருதும் பெற்றது. மேலும் ஆஸ்கர் அகாடமியின் நடிகர்கள் குழுவின் ஒரு உறுப்பினராகவும் ஜூனியர் என்.டி.ஆர் சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தின் சி.இ.ஓ  டெட் சரண்டோஸை நடிகர் சிரஞ்சீவி வீட்டில் சந்தித்து பேசினார். மேலும் அவருடைய குழுவினருடன் இணைந்து மதிய உணவும் அருந்தியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் சமூகவலைத்தளத்தில், டெட் சரண்டோஸ் உங்களுடனும் உங்கள் குழுவினருடன் இணைந்து மதிய உணவு அருந்தியது பெருமையாக உள்ளது . மேலும் நம்முடைய உரையாடல்களும் மதியம் நாம் சாப்பிட்ட உணவும், நாம் கண்டுகளித்த திரைப்படமும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com