அடுத்த சிம்ரன்...பிரியா வாரியரை மீண்டும் டிரெண்டாக்கிய குட் பேட் அக்லி

‘தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ பாடலுக்கு பிரியா வாரியர் நடனம் ஆடி உள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை,
நடிகை மஞ்சுவாரியார் மலையாளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளிவந்த ஒரு அடார் லவ் படம் மூலம் அறிமுகமானார். ஆனால் அவரை பேமஸ் ஆக்கியது அப்படத்தின் பாடல் தான். 2018-ம் ஆண்டு வெளிவந்த ஒரு அடார் லவ் படத்தின் 'மாணிக்க மலராய' என்கிற பாடல் வீடியோவில் பிரியா வாரியர் கண்ணடித்தது ரசிகர்களை கவர்ந்தது.அவர் கண்ணடித்த கிளிப்பை மட்டும் கட் செய்து, அதை இணையத்தில் வைரல் ஆக்கினர். இதனால் சோசியல் மீடியாவே ஸ்தம்பித்து போனது எனலாம். அந்த அளவிற்கு அவர் அப்போது டிரெண்ட் ஆனார்.
2018-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலம் என்கிற பெருமையையும் பெற்றார் பிரியா வாரியர். அதுமட்டுமின்றி அந்த கண்ணடிக்கும் வீடியோ வைரலான பின்னர் இன்ஸ்டாவில் பிரியா வாரியரை பின் தொடர்வோர் எண்ணிக்கையும் அதிகரித்தது. ஒரே நாளில் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்ந்த ஒரே நடிகை என்கிற சாதனையையும் படைத்தார் பிரியா வாரியர்.
சமீப காலமாக அவர் நடித்த படங்கள் அந்த அளவிற்கு அவருக்கு கைகொடுக்கவில்லை. அண்மையில் தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் நடித்திருந்த பிரியா வாரியருக்கு அப்படம் கைகொடுக்காவில்லை.
இந்தநிலையில், அஜித்துடன் அவர் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் அவரை பட்டிதொட்டியெங்கும் தற்போது பேமஸ் ஆக்கி உள்ளது. அன்று கண்ணழகால் டிரெண்டான் பிரியா, இன்று இடுப்பழகால் மறுபடியும் டிரெண்டிங் ஹீரோயினாக உருவெடுத்துள்ளார். இப்படத்தில் அர்ஜுன் தாஸ் உடன் இணைந்து 'தொட்டு தொட்டு பேசும் சுல்தானா' பாடலுக்கு பிரியா வாரியர் நடனம் ஆடி உள்ளது அப்படத்தில் ஹைலைட்டான விஷயமாக பார்க்கப்படுகிறது. அடுத்த சிம்ரன் ரேஞ்சுக்கு பிரியா வாரியரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அடுத்த சிம்ரன் இவர்தான் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.






