ரித்திகா சிங்குக்கு ரசிகர்கள் சூட்டிய செல்லப்பெயர்!

நடிகை ரித்திகா சிங்குக்கு அவரது ரசிகர்கள் செல்லப்பெயர் ஒன்றை சூட்டியுள்ளனர்.
ரித்திகா சிங்குக்கு ரசிகர்கள் சூட்டிய செல்லப்பெயர்!
Published on

இறுதிச்சுற்று படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்த ரித்திகாசிங், நிஜவாழ்க்கையிலும் குத்துச்சண்டை வீராங்கனை என்பது அனைவருக்கும் தெரிந்த தகவல். அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது. ஒரே படத்தின் மூலம் அவர் திரையுலகில் பிரபலமானார்.

தெலுங்கு பட வாய்ப்புகள் அதிகமாக வர ஆரம்பித்தன. தற்போது அவர் தமிழை விட, தெலுங்கில் அதிகமாக நடித்து வருகிறார்.

இவர் நடித்த ஓ மை கடவுளே என்ற தமிழ் படம், நிறைய ரசிகர்களை சம்பாதித்து கொடுத்தது. அந்த படத்தில் வந்த நூடுல்ஸ் மண்ட என்ற பெயர், இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டது. ரித்திகாசிங்கை நூடுல்ஸ் மண்ட என்று செல்லமாக அழைக்கிறார்கள்.

ரசிகர்களின் அன்பை பார்த்து நெகிழ்ந்து போன ரித்திகாசிங், தன்னை கருப்பு உடையில் கவர்ச்சியாக படம் எடுத்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com