நிதி அகர்வாலுக்கு ''அதிர்ச்சி'' கொடுத்த ரசிகர்


Nidhhi Agerwal gets shock from fan
x
தினத்தந்தி 13 July 2025 1:15 PM IST (Updated: 13 July 2025 1:16 PM IST)
t-max-icont-min-icon

நிதி அகர்வால் தனது எக்ஸ் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார்.

சென்னை,

கடந்த சில ஆண்டுகளாக நிதி அகர்வால் நடிப்பில் எந்தப் படமும் வெளியாகாமல் இருந்தநிலையில், வருகிற 24-ம் தேதி ''ஹரி ஹர வீர மல்லு'' படம் வெளியாக உள்ளது. இது மட்டுமில்லாமல் பிரபாஸுடன் இவர் நடித்துள்ள ''தி ராஜா சாப்'' படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியாகிறது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நிதி அகர்வால் தனது எக்ஸ் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அந்த உரையாடலின் போது, ரசிகர் ஒருவர் அவருக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

அந்த ரசிகர் "உங்கள் அம்மாவின் தொலைபேசி எண்ணை எனக்குத் தர முடியுமா?, நம் திருமணத்தை பற்றி அவரிடம் பேச வேண்டும்," என்று கேட்டார். அதற்கு நிதி அகர்வால் "அப்படியா? குறும்பு..." என்று பதிலளித்தார்.

தமிழில் சிம்புவுடன் 'ஈஸ்வரன்', ரவிமோகனுடன் 'பூமி', உதயநிதியுடன் 'கலகத் தலைவன்' ஆகிய படங்களில் நிதி அகர்வால் நடித்திருக்கிறார்.

1 More update

Next Story