’அந்த படத்திற்கு பிறகு பல படங்களில் கையெழுத்திட்டேன்’ - நிதி அகர்வால்

பாலிவுட் படமான முன்னா மைக்கேல் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நிதி அகர்வால்.
சென்னை,
வருகிற 10-ம் தேதி தமிழில் வெளியாகவுள்ள " தி ராஜா சாப் " படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ள நடிகை நிதி அகர்வால், தற்போது மூன்று புதிய படங்களில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பவன் கல்யாணுடன் ஹரி ஹர வீர மல்லு படத்தில் நடித்த பிறகு தனக்கு பல நல்ல வாய்ப்புகள் வரத் தொடங்கியதாக நிதி அகர்வால் கூறினார். குறிப்பாக தெலுங்கில் தற்போது மூன்று படங்களை ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் கூறினார். மேலும் அந்த படங்களின் விவரங்கள் தி ராஜா சாப் வெளியான பிறகு வெளியாகும் என்றும் கூறினார்.
பாலிவுட் படமான முன்னா மைக்கேல் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நிதி அகர்வால், பின்னர் தெலுங்கில் அறிமுகமானார். அதன் பிறகு, தொடர்ச்சியாக தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் சிம்புவுக்கு ஜோடியாக ஈஸ்வரன், ரவி மோகனுடன் பூமி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.






