நடிகை நிஹாரிகா தயாரிக்கும் 2-வது படம்...இயக்குனர் இவரா?


Niharika Konidela to back a female director
x

நடிகையாக இருந்து தயாரிப்பாளராக மாறி இருப்பவர் நிஹாரிகா கொனிடேலா.

சென்னை,

நடிகையாக இருந்து தயாரிப்பாளராக மாறி இருப்பவர் நிஹாரிகா கொனிடேலா. இவர் தனது தயாரிப்பு பேனரான பிங்க் எலிபென்ட் பிக்சர்ஸ் மூலம் 'கமிட்டி குரோல்லு' என்ற படத்தை தயாரித்து தயாரிப்பாளரானார். அந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு, அவர் இப்போது மற்றொரு படத்தைத் தயாரிக்க உள்ளார்.

இந்த படத்தை மானசா ஷர்மா இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது உண்மையாகும் படசத்தில் மானசா இயக்கும் முதல் திரைப்படமாக இது அமையும். மானசா ஷர்மா முன்பு பிங்க் எலிபென்ட் பிக்சர்ஸின் வெப் தொடரான "ஒரு சின்ன பேமிலி ஸ்டோரி"-ல் கிரியேட்டிவ் இயக்குனராகவும், "பெஞ்ச் லைப்"-ல் இயக்குனராகவும் பணியாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story