’அனைவருக்கும் சொந்த வீடு, கார்... அதுதான் என் கனவு’ - நிஹாரிகா

நிஹாரிகா இப்போது “ரகாசா” திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
’அனைவருக்கும் சொந்த வீடு, கார்... அதுதான் என் கனவு’ - நிஹாரிகா
Published on

சென்னை,

நடிகையாக இருந்து தயாரிப்பாளராக மாறி இருப்பவர் நிஹாரிகா கொனிடேலா. இவர் தனது தயாரிப்பு பேனரான பிங்க் எலிபென்ட் பிக்சர்ஸ் மூலம் 'கமிட்டி குரோல்லு' என்ற படத்தை தயாரித்து தயாரிப்பாளரானார். அந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு, அவர் இப்போது “ரகாசா” திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

இப்படம் வருகிற 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மானசா சர்மா இயக்கியுள்ள இந்தப் படத்தில் சங்கீத் ஷோபன்மற்றும் நயன் சரிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதுவரை வெளியான கிளிம்ப்ஸ், டீசர், டிரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

Also Read
3 வருடங்களாக ஹிட் இல்லை… பூஜா ஹெக்டே அதிரடி முடிவு
’அனைவருக்கும் சொந்த வீடு, கார்... அதுதான் என் கனவு’ - நிஹாரிகா

இந்த நிலையில், படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் பேசிய நிஹாரிகா கொனிடெலா, “எங்கள் பிங்க் எலிபென்ட் குழுவில் பணிபுரியும் அனைவருக்கும் சொந்த வீடும், காரும் இருக்க வேண்டும் என்பது என் ஆசை. குடும்பத்துடன் பயணம் செய்ய வேண்டும் என்பதும் என் கனவு. ஏப்ரல் 3-ஆம் தேதி வெளியாகும் ‘ரகாசா’ படம் முழுவதும் மகிழ்ச்சியை அளிக்கும்,” என கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com