நிஹார் நடிப்பில் உருவாகி இருக்கும் 'ரெக்கார்ட் பிரேக்' படத்தின் டிரைலர் வெளியீடு

'ரெக்கார்ட் பிரேக்' திரைப்படம் தமிழ் உள்பட 8 மொழிகளில் வருகிற மார்ச் 8ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
நிஹார் நடிப்பில் உருவாகி இருக்கும் 'ரெக்கார்ட் பிரேக்' படத்தின் டிரைலர் வெளியீடு
Published on

சென்னை,

நடிகை ஜெயசுதா மகன் நிஹார் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'ரெக்கார்ட் பிரேக்'. இப்படத்தை சத்லவாதா ஸ்ரீனிவாஸ் ராவ் இயக்கியுள்ளார். ஸ்ரீ திருமலா திருப்பதி வெங்கடேஸ்வரா பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. நாகர்ஜூனா, ராக்தா இப்திகர் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் வருகிற மார்ச் 8ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி, போஜ்புரி, பெங்காலி மற்றும் ஒடியா ஆகிய 8 மொழிகளில் இப்படம் வெளியாகிறது.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த வெளியீட்டு விழாவில் நடிகர் நிஹார், நாகர்ஜூனா, சத்யா, நடிகை ராக்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது அந்த விழாவில் பேசிய நடிகர் நாகர்ஜூனா, "இது எனக்கு முதல் படம். இந்த வாய்ப்புக் கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப் படம் தெலுங்கு ரசிகர்களுக்கு மட்டுமல்ல, தமிழ் ரசிகர்களுக்கும் மிகவும் பிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. படம் பார்த்து நிச்சயம் மகிழ்வீர்கள்" என்றார்.

இதனை தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர், நடிகர் பிரசன்னா குமார், "எட்டு மொழிகளில் மார்ச் 8 அன்று இந்த படம் வெளியாகிறது. மார்ச் 8 மகா சிவராத்திரி மற்றும் பெண்கள் தினம். அதற்கேற்றார்போல ஆன்மீகம் மற்றும் பெண்களுக்கு வலுவான கன்டென்ட் இந்த படத்தில் உள்ளது. அம்மா செண்டிமெண்ட் மற்றும் விவசாயிகள் பிரச்சினையும் இதில் பேசப்பட்டுள்ளது. ரெஸ்லிங்கில் எப்படி ஹீரோ போட்டிப் போட்டு எதிர்நாடான சீனா, பாகிஸ்தானை ஜெயிக்கிறான் என்பதுதான் 'ரெக்கார்ட் பிரேக்'. படம் நிச்சயம் ஹிட் ஆகும்" என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com