தனுஷின் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தின் அப்டேட்

தனுஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் முதல் பாடல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தனுஷின் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தின் அப்டேட்
Published on

சென்னை,

ராயன் படம் கடந்த ஜூலை 26ம் தேதி வெளியாகி வெற்றி நடை போட்ட நிலையில் ஓ.டி.டி.யிலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதே சமயம் தனுஷ் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்'.

இந்த படத்தின் மூலம் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் இந்தப் படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

படத்தின் முதல் பாடலுக்கான பைனல் மிக்சிங் முடிவடைந்தது. விரைவில் படத்தின் முதல் பாடல் வெளியாகும் என ஜி.வி பிரகாஷ் குமார் நேற்று தெரிவித்தார். இந்நிலையில் முதல் பாடல் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக தற்பொழுது அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com