"நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்" முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தனுஷ் இயக்கத்தில், தனுஷின் சகோதரி மகன் நடித்துள்ள “நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்” படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
"நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்" முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
Published on

சென்னை,

நடிகர் தனுஷ் இயக்கி உள்ள படம் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'. இப்படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கதூன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த் ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இளைஞர்களின் காதல், உறவுமுறை, திருமணம் பற்றிய கதைக்களம் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் உலகம் முழுவதும் நேற்று முதல் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படம் முதல் நாள் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் முதல் நாள் உலகளவில் ரூ3 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பதுமட்டுமில்லாமல் சில படங்களை இயக்கியும் இருக்கிறார். அதன்படி, அவர் இயக்கிய முதல் படம் 'ப பாண்டி. இப்படம் சுமாரான வெற்றியை பெற்றது. 2-வதாக தனுஷ் இயக்கிய படம் ராயன்'. இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது அவரது இயக்கத்தில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படம் நேற்று வெளியானது. இதற்கு முன்பு இயக்கிய 2 படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த தனுஷ் இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.இந்தப் படம் வெற்றி பெறும் பட்சத்தில் இயக்குனராக தனுஷ் ஹாட்ரிக் வெற்றி பெறுவார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com