தனுஷ் இயக்கிய 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' பட டிரெய்லர் வெளியீடு

தனுஷ் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' உருவாகியுள்ளது.
Nilavuku En Mel Ennadi Kobam Trailer Out Now
Published on

சென்னை,

தனுஷ், ராஜ் கிரண் நடித்த 'பவர் பாண்டி' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தனுஷ் கடைசியாக இயக்கி, நடித்த 'ராயன்' படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தனுஷ் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' உருவாகியுள்ளது.

இந்த படத்தின் மூலம் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் இந்தப் படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

இப்படம் வருகிற 21-ம் தேதி வெளியாக உள்ளநிலையில், படத்தின் டிரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த டிரெய்லர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com