'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' : புதிய பாடலின் அப்டேட் வெளியானது

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாவது பாடலை தனுஷ் பாடியுள்ளார்.
'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' : புதிய பாடலின் அப்டேட் வெளியானது
Published on

சென்னை,

தனுஷ், ராஜ் கிரண் நடித்த 'பவர் பாண்டி' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தனுஷ் கடைசியாக இயக்கி, நடித்த 'ராயன்' படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது தனுஷ் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' உருவாகியுள்ளது. மேலும் 'இட்லி கடை' எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வர தயாராகி வருகிறது.

'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தின் மூலம் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தில் அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

இதற்கிடையில், இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'கோல்டன் ஸ்பாரோ' என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. இந்த பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். இப்பாடல் 75 மில்லியன் பார்வைகளை கடந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கோல்டன் ஸ்பேரோ பாடலை சுபலட்சுமி, ஜி.வி பிரகாஷ் குமார் , தனுஷ் மற்றும் அறிவு ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

இந்தநிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாவது பாடலின் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி,வருகிற 25-ந் தேதி 'காதல் பெயில்' என்ற பாடல் வெளியாக உள்ளது. இந்த பாடலை தனுஷ் பாடியுள்ளார். இந்த பாடலும் கோல்டன் ஸ்பேரோ பாடலைப் போல் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com