"நிறம் மாறும் உலகில்" படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது


தினத்தந்தி 15 Feb 2025 1:33 AM IST (Updated: 20 Feb 2025 7:03 AM IST)
t-max-icont-min-icon

பாரதிராஜா நடித்துள்ள 'நிறம் மாறும் உலகில்' படம் வரும் மார்ச் 7ம் தேதி வெளியாகவுள்ளது.

சென்னை,

இயக்குனர் பாரதி ராஜா தற்போது அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் 'நிறம் மாறும் உலகில்' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நட்டி,யோகி பாபு, ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர், சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மல்லிகா அர்ஜுன், மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு தேவ் பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

சிக்னேச்சர் புரொடக்சன்ஸ் மற்றும் ஜி.எஸ். சினிமா இன்டர்நேஷனல் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. வாழ்க்கையில் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளைப் பேசும் படமாக இந்த படம் உருவாகி உள்ளது. திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் மார்ச் 7-ம் தேதி வெளியாகவுள்ளது.

படத்தின் நடிக்கும் கதாபாத்திரங்களின் அறிமுக போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது. அதியன் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் ரியோ ராஜ், பாலா கதாப்பாத்திரத்தில் விக்னேஷ் காந்த், மகிமை கதாப்பாத்திரத்தில் மைம் கோபி, கண்ணபிரான் கதாப்பாத்திரத்தில் சுரேஷ் சக்கரவர்த்தி, பரிமளம் கதாப்பாத்திரத்தில் ஆதிரா ஆகியோரின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் "நிறம் மாறும் உலகில்" படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. 'ரங்கம்மா' பாடலை பிரபுதேவா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

1 More update

Next Story