'அதிதா சர்ப்ரைஸ்' விமர்சனத்திற்கு பதில் அளித்த நிதின்


Nithiin Reacts To ‘Adhi Dha Surprise’ Criticism!
x
தினத்தந்தி 23 March 2025 11:41 AM IST (Updated: 23 March 2025 11:43 AM IST)
t-max-icont-min-icon

கெட்டிகா ஷர்மா நடனமாடிய 'அதிதா சர்ப்ரைஸ்' பாடலில் இடம்பெற்ற நடன அசைவுகள் பலரது விமர்சனங்களுக்கு உள்ளானது.

சென்னை,

ஸ்ரீலீலா மற்றும் நிதின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் 'ராபின்ஹுட்'. இப்படம் வரும் 28-ம் தேதி வெளியாக உள்ளது. இப்படம் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

அந்த கவனத்தை ஈர்க்கும் முக்கிய அம்சங்களில் ஒன்று, கெட்டிகா ஷர்மா நடனமாடிய 'அதிதா சர்ப்ரைஸ்' என்ற சிறப்புப் பாடல். இந்த பாடலில் இடம்பெற்ற நடன அசைவுகள் பலரது விமர்சனங்களுக்கு உள்ளானது.

இந்நிலையில், இந்த விமர்சனத்திற்கு நிதின் பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில், "'அதிதா சர்ப்ரைஸ்' பாடலில் நான் இடம்பெறவில்லை. அது படமாக்கப்பட்டதையும் நான் பார்க்கவில்லை. படம் பார்த்தபோதும் அதில் நான் கவனம் செலுத்தவில்லை. ஆனால் அந்த டிரோல்களைப் பார்த்த பிறகுதான் சர்ச்சையை புரிந்து கொண்டேன். பாடல் வெளியான பிறகு பாசிட்டிவ், நெகட்டிவ் என இருவிதமான கருத்துகள் வந்தன. அனைவரின் கருத்துகளையும் மதிக்கிறேன்." என்றார்.

நடன அசைவுகள் குறித்து பலர் அதிருப்தி தெரிவித்தநிலையில், சமீபத்தில் தெலுங்கானா மகளிர் ஆணையம் பெண்களை இழிவுப்படுத்தும் விதமாக படத்தில் இடம்பெறும் நடன அசைவுகள் தவிர்க்கப்பட வேண்டும் அல்லது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தது.

1 More update

Next Story