

சென்னை
1998ம் ஆண்டு வெளியான ஹனுமான் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நித்யா மேனன்.
மலையாள படங்களில் நடித்து வந்த இவர், தமிழில் வெப்பம், 180 டிகிரி உள்ளிட்ட படங்களின் மூலமாக கடந்த 2011ம் ஆண்டு காலடி எடுத்து வைத்தார். காஞ்சனா, மெர்சல், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் இவர் நடித்துள்ளார்.
தனுஷ் உடன் ஜோடியாக இந்த ஆண்டு நித்யா மேனன் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்து மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. தனுஷை விட அந்த படத்தில் ஷோபனாவாக நடித்த நித்யா மேனன் நடிப்பைத் தான் ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் ஆங்கில மொழி படங்களில் நடித்து வருகிறார்.
34 வயதை கடந்த நித்யா மேனன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்த் நிலையில் நித்யா மேனன் பிரெக்னன்ஸி டெஸ்ட்டில் பாசிட்டிவ் என வந்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் தற்போது பதிவிட்டு அனைவரையும் பதற வைத்துள்ளார்.
தற்போது தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பிரெக்னன்ஸி டெஸ்ட் செய்து பாசிட்டிவாக இரு கோடுகள் வந்த கிட்டையும் அதன் அருகே குழந்தைக்கு கொடுக்கப்படும் ரப்பர் நிப்பிலையும் வைத்து எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு And, the Wonder Begins என கேப்ஷன் கொடுத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.
உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா? என்றும் வாழ்த்துக்கள் நித்யா மேனன் என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.மேலும், சில ரசிகர்கள் நித்யா மேனன் அம்மாவானதற்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டு வருகின்றனர்.
இது கண்டிப்பாக நித்யா மேனனின் புதிய பட ப்ரொமோஷனாகத்தான் இருக்கும் என சிலர் கமெண்ட் அடித்துள்ளனர்.
இதுபோல் ஒரு படத்தை நடிகை பார்வதியும் நடிகை சயனோராவும் தங்களது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளனர்.
View this post on Instagram
அஞ்சலி மேனன் இயக்கும் புதிய படத்தின் புரமோஷனின் ஒரு பகுதியாகும். நடிகைகள் நதியா, பார்வதி, நித்யா மேனன், பத்மப்ரியா மற்றும் அர்ச்சனா பத்மிமி ஆகியோர் இப்படத்தில் கர்ப்பிணிப் பெண்களாக நடிக்க உள்ளனர்.
பாடகி சயனோராவின் முதல் படமும் இதுதான். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.படத்திற்கு வொண்டர் வுமன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.