காதலருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டார் நிவேதா பெத்துராஜ்

இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் தனது காதலரை அறிமுகப்படுத்தினார்.
சென்னை,
‘ஒரு நாள் கூத்து', ‘பொதுவாக என் மனசு தங்கம், ‘டிக் டிக் டிக்', ‘திமிரு புடிச்சவன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நிவேதா பெத்துராஜ். இவர் கார் பந்தய வீராங்கனையுமாகவும் வலம் வருகிறார்.
இந்த நிலையில், நேற்று இரவு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் தனது காதலரை அறிமுகப்படுத்தினார். நிவேதா பெத்துராஜ் காதலரின் பெயர் ரஜித் இப்ரான். மாடலிங் துறையைச் சேர்ந்த இவர் தொழில் அதிபரும் கூட. விரைவில் திருமண தேதியை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி நிவேதா பெத்துராஜ் - ரஜித் இப்ரான் ஜோடிக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story






