நிவின் பாலியுடன் இணையும் மமிதா பைஜு

கிரிஷ் ஏ.டி இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜு நடிக்கும் ‘பெத்லெம் குடும்ப யூனிட்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
‘பிரேமலு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் கிரிஷ் ஏ.டி, ‘பிரேமலு’ 2ம் பாகத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தார். அந்த கதையில் திருப்தி இல்லாததால் தற்காலிகமாக அதன் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து கிரிஷ் ஏ.டி இயக்கும் புதிய படத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி கதாநாயகனாக நடிக்கிறார். இதில் கதாநாயகியாக பிரேமலு மமிதா பைஜூ நடிக்கிறார். இதை பகத் பாசில் தயாரிக்கிறார். இதற்கு ‘பெத்லெம் குடும்ப யூனிட்’ என டைட்டில் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தற்போது இந்த படத்திற்கான இசையமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கிரிஷ் ஏ.டி இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜு நடிக்கும் ‘பெத்லெம் குடும்ப யூனிட்’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இப்படத்தை ஓணம் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.






