நிவின் பாலியின் “பெத்லகேம் குடும்ப யூனிட்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு

கிரிஷ் ஏடி இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜு நடித்துள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படம் ஓணம் பண்டிகையை ஒட்டி திரைக்கு வருகிறது.
நிவின் பாலியின் “பெத்லகேம் குடும்ப யூனிட்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு
Published on

‘பிரேமலு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் கிரிஷ் ஏ.டி, பிரேமலு 2ம் பாகத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தார். அந்த கதையில் திருப்தி இல்லாததால் அதன் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து கிரிஷ் ஏ.டி இயக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி கதாநாயகனாக நடிக்கிறார். இதில் கதாநாயகியாக பிரேமலு மமிதா பைஜூ நடிக்கிறார். இதை பகத் பாசில் தயாரிக்கிறார்.

இந்நிலையில், கிரிஷ் ஏ.டி இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜு நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இப்படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிவின் பாலி நடித்த ‘சர்வம் மாயா’ திரைப்படம் மூலம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றார். இருப்பினும், அவருடைய மற்ற இரண்டு படங்களான ‘பேபி கேர்ள்’ மற்றும் 'பிரதிச்சயா' ஆகியவை பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. நிவின் பாலியின் வரவிருக்கும் படங்களில் நயன்தாராவுடன் ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’, ராகவா லாரன்ஸுடன் ‘பென்ஸ்’, மற்றும் சூரி, அஞ்சலி மற்றும் இயக்குனர் ராம் ஆகியோருடன்‘ஏழு கடல் ஏழு மாலை’ ஆகியவையும் அடங்கும் .

X

Daily Thanthi
www.dailythanthi.com