நிவின் பாலியின் புதிய பட அறிவிப்பு

அருண் வர்மா இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரம்,
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நிவின் பாலி. இவர், நயன்தாராவுடன் நடித்த டியர் ஸ்டூடன்ஸ் வெளியீட்டிற்குத் தயாராக இருக்கிறது. ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு 'லவ் ஆக்சன் டிராமா' என்ற திரைப்படத்தில் நிவின் பாலியுடன் இணைந்து நயன்தாரா நடித்திருந்த நிலையில் அந்த படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இரண்டாவது முறையாக நிவின் பாலியுடன் நயன்தாரா இணைந்துள்ளார். மேலும் இயக்குநர் ஆதித்யன் சந்திரசேகர் இயக்கும் 'மல்டிவெர்ஸ் மன்மதன்' என்கிற படத்தில் நிவின் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் இவரது அடுத்த படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. நிவின் பாலி நடிக்கவுள்ள கிரைம் திரில்லர் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்திற்கு பேபி கேர்ள் எனப் பெயரிட்டுள்ளனர். சுரேஷ் கோபி, பிஜூ மேனன் நடிப்பில் உருவான கருடன் படத்தின் இயக்குநர் அருண் வர்மா இப்படத்தை இயக்குகிறார்.






