வில் ஸ்மித்துடன் விவாகரத்து இல்லை - ஜடா பிங்கெட் அறிவிப்பு

வில் ஸ்மித்துடன் விவாகரத்து இல்லை என்று நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட ஜடா பிங்கெட் அறிவித்துள்ளார்.
வில் ஸ்மித்துடன் விவாகரத்து இல்லை - ஜடா பிங்கெட் அறிவிப்பு
Published on

ஹாலிவுட் நட்சத்திர தம்பதியான வில் ஸ்மித் - ஜடா பிங்கெட் விவாகரத்து செய்து பிரியப் போவதாக தகவல் பரவி வந்தது. இந்த நிலையில் நிகழ்ச்சியொன்றில் ஜடா பிங்கெட் கலந்து கொண்டிருக்கும்போது, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் லில் ஸ்மித்தின் கடிதத்தை படித்தனர்.

அந்த கடிதத்தில், "30 ஆண்டுகளுக்கு முன்பு உனது விருப்பங்கள் அடங்கிய டைரியை படித்திருந்தால், உன்னை இன்னும் அதிகமாக காதல் செய்து இருப்பேன். கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்தி இருப்பேன். நான் இப்போது எனது காதலை ஆரம்பிக்கிறேன். உன் மீது ஆழமான அன்பு வைத்திருக்கிறேன். உன்னை பாராட்டுகிறேன்'' என்று வில் ஸ்மித் குறிப்பிட்டிருந்தார்.

இந்த கடிதத்தை படிக்க கேட்டதும் ஜடா பிங்கெட் உணர்ச்சி வசப்பட்டு கூறும்போது, "இதுபோன்ற அளவு கடந்த காதலால்தான் வில் ஸ்மித்தை என்னால் விவாகரத்து செய்ய முடியவில்லை. இன்னொரு காதலை தேடிப்போகும் தேவை இல்லை. எங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கருத்து வேறுபாடு உள்ளிட்ட பிரச்சினைகளை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். விரைவாக அதை செய்து முடிப்போம் என்று நம்புகிறோம்", என்றார்.

ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் தனது மனைவி ஜடா பிங்கெட்டை கேலி செய்யும் வகையில் பேசிய கிரிஷ் ராக்கை, வில் ஸ்மித் கன்னத்தில் அறைந்து பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com