"என்னுடைய படங்களை எத்தனை முறை ஒளிபரப்பினாலும் மக்கள் பார்ப்பார்கள்.. ஆனால்" - கே.எஸ்.ரவிக்குமார்

சமீபத்தில் கே.எஸ். ரவிக்குமார் அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது.
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குனர்களில் ஒருவர் கே.எஸ்.ரவிக்குமார். 1991 ஆம் ஆண்டு வெளியான புரியாத புதிர் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தமிழில் டாப் ஹிட் படங்களைத் தந்த முக்கியமான இயக்குநர்களில் இவரும் ஒருவர். இவரது இயக்கத்தில் கடைசியாக கேம் சேஞ்சர் படம் வெளியானது. இந்த படம் எதிர்பார்த்த அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.
இந்த நிலையில், ரவிக்குமார் அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது. அதில் அவர் கூறுகையில், "இப்போ வெளிவரும் திரைப்படங்கள் தியேட்டரில் ஒருநாள் பார்த்துவிட்டு டிவியில் மீண்டும் பார்த்தால் போர் அடிச்சுடும்; ஆனால் என்னுடைய திரைப்படங்கள் எத்தனை முறை டிவியில் ஒளிபரப்பினாலும் மக்கள் இன்னும் உட்காந்து போர் அடிக்காமல் பார்க்கிறார்கள், இன்னும் 50 வருடம் ஆனால் கூட பார்ப்பார்கள்!" என்று கூறியுள்ளார்.






