“உலகம் என்ன பேசினாலும் கவலை இல்லை” - நயன்தாரா

நயன்தாராவும் டைரக்டர் விக்னேஷ் சிவனும் காதலிக்கிறார்கள். இருவரும் ஜோடியாக சுற்றும் படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.
“உலகம் என்ன பேசினாலும் கவலை இல்லை” - நயன்தாரா
Published on

காதலர் தினம், நண்பர்கள் தினம் என்று ஒவ்வொரு சிறப்பான நாட்களிலும் நெருக்கமான படங்களை வெளியிடுகின்றனர். இவர்கள் காதல் பற்றி சினிமா உலகம் பேசுகிறது. ரசிகர்களும் பேசுகிறார்கள்.

ஆனால் அதைப்பற்றி கவலைப்படாமல் கருத்தும் சொல்லாமல் காதலை வளர்த்து வருகிறார்கள். இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது என்கின்றனர். பல கோடி மதிப்பில் ஆடம்பர பங்களா வாங்கி அதில் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்கிறார்கள் என்றும் கிசுகிசுக்கிறார்கள்.

நயன்தாரா இப்போது இமைக்கா நொடிகள், கோலமாவு கோகிலா, விஸ்வாசம், கொலையுதிர் காலம், தெலுங்கில் சைரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். கோலமாவு கோகிலா படம் திரைக்கு வர தயாராக உள்ளது. இதில் போதை பொருள் கடத்தும் பெண்ணாக அவர் நடித்து இருப்பதாக தகவல்.

இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று வருகிறார். படத்தில் இடம்பெற்ற பாடலொன்றை விக்னேஷ் சிவனை வைத்து வெளியிட்டுள்ளனர். டெலிவிஷன் நிகழ்ச்சியொன்றில் நயன்தாரா பங்கேற்றபோது, காதல் பற்றிய பேச்சுக்களுக்கு விளக்கம் அளித்தார். அவர் கூறும்போது, இந்த உலகம் உங்களை பார்க்கிற விதம் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கும். சிலருக்கு இன்று உங்களை பிடிக்கும். நாளையே அவர்களுக்கு பிடிக்காமலும் போகலாம். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று சிந்தித்துக்கொண்டு இருந்தால் நாம் ஒரு வாழ்க்கையை வாழ முடியாது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com