நேஷனல் கிரஸ் இல்லை...மக்கள் அப்படி அழைப்பதுதான் எனக்கு பிடிக்கும் - ருக்மிணி

காந்தாரா படத்திற்கு பின் அனைவரும் ருக்மிணியை 'நேஷனல் கிரஷ் ' என்று கூறி வருகின்றனர்.
no national crush...I just like what people call it - Rukmini
Published on

சென்னை,

காந்தாரா சாப்டர் 1 வெளியான பிறகு, ருக்மிணி வசந்தின் பெயர் இந்திய அளவில் பிரபலமாகி வருகிறது. அதற்கு முக்கிய காரணம் அவரின் அழகு மட்டுமல்ல நடிப்பால் பார்வையாளர்களைக் கவர்ந்திருப்பதும் ஆகும். அவர் ஒரு நட்சத்திர கதாநாயகியாக முத்திரை பதித்துள்ளார்.

காந்தாரா படத்தைப் பார்த்த அனைவரும் அவரை 'நேஷனல் கிரஷ் ' என்று கூறி வருகின்றனர். இந்நிலையில், 'நேஷனல் கிரஷ் ' என்று அழைப்பதை விட பிரியா என்று அழைப்பதே தனக்கு பிடித்திருப்பதாக ருக்மிணி கூறினார். அவர் கூறுகையில்,

நேஷனல் கிரஷ் என என்னை அழைப்பது நன்றாகதான் இருக்கிறது. ஆனால் மக்கள் என்னை பிரியா என அழைப்பதுதான்  எனக்கு பிடித்திருக்கிறது. 'சப்த சாகரடாச்ச எல்லோ' படத்தில் நடித்த பிரியா என்ற எளிமையான கதாபாத்திரத்தை மக்கள் விரும்புகின்றனர்" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com