சினிமா துறையில் விஜய் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது- நடிகர் சூரி பேட்டி

சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த நடிகர் சூரி நிருபர்களிடம் விஜய் குறித்து பேசியுள்ளார்.

சினிமா துறையில் விஜய் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது- நடிகர் சூரி பேட்டி
Published on

கோவை,

சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்ற நடிகர் சூரி நிருபர்களிடம் பேசிய போது, சினிமா துறையில் நடிகராக விஜய் இல்லாதது ஏமாற்றம்தான். அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. என்றார்

'மண்டாடி' படத்தில் சூரி

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, தற்போது முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சூரி, தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். தற்போது, மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் 'மண்டாடி' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை எல்ரெட் குமார் தனது ஆர்.எஸ். இன்போ நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார். மீனவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார்.

10ந் தேதி வெளியாகும் 'மண்டாடி'

மேலும், தெலுங்கு நடிகர் சுஹாஸ், நடிகர் சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்சுத் குமார், சச்சனா நமிதாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், 'மண்டாடி' படக்குழு படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்ற நடிகர் சூரி நிருபர்களிடம் பேசிய போது, முதல்-அமைச்சர் விஜய் குறித்தும், சட்டசபை நிகழ்வு குறித்தும் பேசியுள்ளார்.

அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது

அவர் பேசியதாவது, "நான் நடித்த மண்டாடி திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சி கோவையில் 2 நாட்கள் நடக்கிறது. இந்த திரைப்படம் மீனவர்களுக்கு மரியாதை செலுத் தும் வகையில் இருக்கும் என்று நம்புகிறேன். தமிழக முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பின்னர், சட்டசபை நிகழ்வுகளை பொதுமக்கள் பார்க்க தொடங்கி விட்டனர். இது ஒரு ஆரோக்கியமான விஷயம்தான். சினிமா துறையில் நடிகராக விஜய் இல்லாதது ஏமாற்றம்தான். அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது." என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com