

சென்னை
சமீபத்தில் சென்னை எழும்பூரில் நிருபர்களை சந்தித்த மீரா மிதுன், போலீசார் லஞ்சம் வாங்கிக் கொண்டு தன் மீது வழக்கு போடுவதாக பகீர் குற்றச்சாட்டை முன் வைத்து இருந்தார்.
அதன் பிறகு ஓட்டல் ஊழியருடன் தகராறில் ஈடுபட்டதாக ஓட்டல் ஊழியர் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் மீரா மிதுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிபிஐ லோகோவை கொஞ்சம் மாற்றி, ஊழல் எதிர்ப்பு ஆணையம் என்ற பெயரில் ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்பின், தமிழக இயக்குநராக மீரா மிதுன் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அறிவிப்பை டிவிட்டரில் வெளியிட்டு, கமல்ஹாசன் பாணியில் இனி யாரும் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என கூறி உள்ளார்.
மீரா மிதுனின் டிவிட்டை அடுத்து நெட்டிசன்கள் விமர்சிக்க தொடங்கி விட்டனர். ஆனாலும், அவர் அதற்கும் தனது பாணியிலேயே பதில் சொல்லியுள்ளார்.
மேலும், இன்ஸ்டாகிராமில் தன்னை பாலோ செய்பவர்கள், அசிங்கமாக திட்டுவதாகவும், அப்படி செய்பவர்கள் யார் என கண்டுபிடித்து விட்டதாகவும், அவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க உள்ளதாகவும் மீரா மிரட்டியுள்ளார்.
மக்களுக்காக உழைப்பேன் என்றும் தன்னால் முடிந்த அளவு தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வருவேன் என்றும் அந்த வீடியோவில் மீரா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டை விட்டே செல்வதாக ஏற்கனவே கூறியிருந்த மீரா மிதுன், ஊழல் எதிர்ப்பு ஆணையம் சார்பில் சென்னையில் போஸ்டிங் கிடைத்துவிட்டதால் இங்குதான் இருக்கப்போவதாக கூறியுள்ளார்.