தேர்தல் முடிவை யாராலும் கணிக்க முடியாது - ஜி.வி.பிரகாஷ்

தேர்தலில் முடிவு இப்படித்தான் இருக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது என்று ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவை யாராலும் கணிக்க முடியாது - ஜி.வி.பிரகாஷ்
Published on

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. இந்த சட்டமன்ற தேர்தலில் வரலாற்று சாதனையாக தமிழகத்தில் 85 சதவீத வாக்குகள் பதிவானது. இளம்தலைமுறை வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்கு செலுத்தினர்.

வாக்கு எண்ணிக்கை வருகிற மே 4-ந்தேதி நடைபெறுகிறது. அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த நிலையில் தேர்தல் முடிவை யாராலும் கணிக்க முடியாது என்று இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் விளம்பரங்களில் நடிக்க பல கோடிகள் கொடுத்தும் ஒரு சில விளம்பரங்களில் நான் நடிப்பதை தவிர்த்துள்ளேன். இந்த தேர்தலில் முடிவு இப்படித்தான் இருக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது. நாம் எதிர்பார்த்தது நடக்கிறதா? என்பது மே 4-ம் தேதி தான் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com