உண்மையாக காதலிக்க யாரும் வருவதில்லை: ரைசா வில்சன்

தனக்கு வரப்போகும் மாப்பிள்ளை பொறுமையாக, மனிதநேயம் மிக்கவராக முக்கியமாக அறிவாளியாக இருக்கவேண்டும் என்று நடிகை ரைசா வில்சன் கூறியுள்ளார்.
பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலம் ஆனவர் ரைசா வில்சன். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் புதிய படங்கள் நடித்து கொண்டிருக்கும் ரைசா வில்சன் அளித்த பேட்டியில் கூறியதாவது: மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தேன். சினிமாவுக்கு வந்தபோது இருந்த பதற்றம், இப்போது இல்லை. காரணம், அனுபவம் தான். ஆண்டுகள் ஒவ்வொன்றாக கடக்க, அதற்கேற்ற அனுபவம் கிடைக்கிறது. எனக்கு வெற்றிகளும், தோல்விகளும் இந்த சினிமா பயணத்தில் கிடைத்திருக்கிறது. அது நிறைய அனுபவங்களை கற்று தந்திருக்கிறது.
அதேவேளை விமர்சனங்களை எதிர்கொள்ளவும் பழகிகொண்டேன். ‘காதல்', ‘லிவிங்' என என்னை பற்றி நிறைய விமர்சனங்களை சொல்லிவிட்டார்கள். பிகினி அணிவதை கூட விமர்சித்தார்கள். என்னை பொறுத்தவரை விமர்சனங்களை தடுக்கவே முடியாது. படிக்கும் காலத்தில் காதலிக்க விருப்பமில்லை. யாரிடமும் எனக்கு காதல் இல்லை. நான் உண்டு, படிப்பு உண்டு என்று இருந்துவிட்டேன்.
ஆனால் இப்போது நல்ல காதலை எதிர்பார்க்கிறேன். ஆனால் உண்மையாக காதலிக்க யாரும் வருவதில்லை.இப்போது வரை எனக்கு யாரும் ‘செட்' ஆகவில்லை. என்னை பொறுத்தவரை எனக்கு வரப்போகும் மாப்பிள்ளை பொறுமையாக, மனிதநேயம் மிக்கவராக, குடும்பத்தை பாதுகாக்கும் நபராக, முக்கியமாக அறிவாளியாக இருக்கவேண்டும். கவர்ச்சி அவசியம் என்று சொல்லமாட்டேன். யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம். அது அவரவர் விருப்பம். என்னை பொறுத்தவரையில் கதைக்கு தேவைப்பட்டால் எதையும் செய்யலாம்” என்றார்.






