பவன் கல்யாண் படத்தை தடுக்கும் தைரியம் யாருக்கும் இல்லை - விஜய் பட தயாரிப்பாளர்


பவன் கல்யாண் படத்தை தடுக்கும் தைரியம் யாருக்கும் இல்லை -  விஜய் பட தயாரிப்பாளர்
x

தெலங்கானா மாநில திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் தலைவரும், பிரபல தயாரிப்பாளருமான ராஜு, பவன் கல்யாண் படம் குறித்து பேசியுள்ளார்.

வேலம்குச்சா வெங்கட ரமணா ரெட்டி என்ற இயற்பெயர் கொண்ட தில் ராஜு, தெலுங்கு திரைப்பட உலகில் மிகவும் பிரபலமான தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராவார். ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். ராஜு தெலங்கானா திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக உள்ளார். தமிழில் விஜய்யை வைத்து 'வாரிசு' படத்தை தயாரித்துள்ளார்.

பவன் கல்யாண் நடித்த "ஹரி ஹர வீரமல்லு" படம் ஜூன் 12ம் தேதியும், ஓஜி படம் செப்டம்பர் மாதம் 25-ந் தேதியும் வெளியாக உள்ளது.

தெலுங்குத் திரையுலகத்தில் ஜூன் 1ம் தேதி முதல் தியேட்டர்கள் ஸ்டிரைக் நடக்க உள்ளதாக அறிவித்தார்கள் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தரப்பிலிருந்து வந்த எதிர்ப்பு காரணமாக, அந்த ஸ்டிரைக்கைக் காலவரையின்றி ஒத்தி வைப்பதாக அறிவித்தார்கள். இந்த 'ஸ்டிரைக்' விவகாரம் தெலுங்கு திரையுலகத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 'நான்கு பேர்' மட்டுமே தெலுங்குத் திரையுலகத்தை முழுமையாக ஆட்டிப்படைப்பதாக சர்ச்சை எழுந்தது. அந்த நான்கு பேர் யார் என பலரும் அவர்களது பெயரைத் தேடி வருகிறார்கள்

இந்நிலையில் தெலங்கானா மாநில திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் தலைவரும், பிரபல தயாரிப்பாளருமான இல் ராஜு நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், "ஆந்திர அரசுக்கு தவறுதலான தகவலைத் தந்துள்ளார்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் தியேட்டர்காரர்கள் சந்திப்பு பற்றி மீடியாக்களும் வேறுவிதமான செய்திகளை வெளியிட்டன பவன் கல்யாண் துணை முதல்வரான பின் தயாரிப்பாளர்கள் அவரை நேரில் சந்தித்து டிக்கெட் விலை உயர்வு குறித்தும், திரையுலக நலன் குறித்தும் பேசியுள்ளார்கள். அவரை சந்திப்பது எங்களுக்கு எளிதாகவும், ஆலோசனையாகவும் இருந்தது. இந்த ஸ்டிரைக் விவகாரம் ஒரு தவறுதலாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஒன்றாக அமைந்தது தொடர்பில் இருந்த இடைவெளிதான் அதற்குக் காரணம் பவன் கல்யாண் படத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று யாருமே நினைத்ததில்லை. அதைத் தடுக்கும் தைரியமும் யாருக்கும் இல்லை,

ஸ்டிரைக் செய்வது ஒரு திட்டமாகத்தான் இருந்தது அதை முடிவு செய்யவில்லை. பிலிம் சேம்பரில் நாங்கள் பேசியதுமே, மீடியாக்கள் தியேட்டர் ஸ்டிரைக் என்பது உறுதி என்ற விதத்தில் செய்திகளை வெளியிட்டார்கள், அதுதான் பிரச்சனையை ஆரம்பித்து வைத்தது எனது 30 வருட அனுபவத்தில் கோவிட் சமயத்தைத் தவிர்த்து தியேட்டர்கள் மூடப்பட்டதே இல்லை" என்று பேசியுள்ளார்.

1 More update

Next Story