“உன்னை யாரும் திருமணம் செய்ய மாட்டார்கள்” - வலியை வெற்றியாக மாற்றிய மீனாட்சி சவுத்ரி

நடிகை மீனாட்சி சவுத்ரி இளம்பருவத்தில் எதிர்கொண்ட துஷ்பிரயோகம் குறித்து பேட்டி அளித்துள்ளார்.
“உன்னை யாரும் திருமணம் செய்ய மாட்டார்கள்” - வலியை வெற்றியாக மாற்றிய மீனாட்சி சவுத்ரி
Published on

விஜய்யுடன் தி கோட், ஆர்.கே.பாலாஜியுடன் சிங்கப்பூர் சலூன் போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் மீனாட்சி சவுத்ரி. தெலுங்கு திரை உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்து வரும் மீனாட்சி சவுத்ரி பாலிவுட் திரை உலகிலும் அறிமுகமாகி சினிமா மற்றும் வெப் தொடர்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

இந்நிலையில் மீனாட்சி சவுத்ரி தனது தோல் நிறம் காரணமாக இளம்பருவத்தில் துஷ்பிரயோகத்தை எதிர்கொண்டது குறித்து அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அரியானா மாநிலத்தில் ஒரு கிராமத்தில் நான் பிறந்து வளர்ந்தேன். கிராமத்தில் எனது நிறம் மற்றும் அழகு குறித்து விமர்சனம் செய்வது மட்டுமின்றி உன்னை யாரும் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என கூறி கிண்டல் செய்து வந்தனர். இப்படி பல விமர்சனங்கள் என்னை காயப்படுத்தின.

இதனால் நான் வைராக்கியத்துடன் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என நினைத்து டாக்டராக விரும்பினேன். நான் அழகாக இருக்கிறேன் என்பதை உலகுக்கு காட்ட நினைத்தேன். நான் என்ன வேண்டுமானாலும் செய்ய என் குடும்பம் எனக்கு சுதந்திரம் கொடுத்தது. அழகை நிரூபிக்க மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றேன். ஜெயித்ததை கொண்டாட கிராமத்திற்கு போனேன். பழங்கால மக்கள் வாழும் கிராமம் என்பதால் முதலில் என்னை விமர்சித்தார்கள்.

மோசமான தொழிலில் ஈடுபடுகிறேன். பிகினி அணிவது ஏற்றுக் கொள்ள முடியாது என எல்லோரும் என்னை எதிர்த்தார்கள். ஆனால் இப்போது என்னால் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. தற்போது என்னை மிகவும் மதித்து வரவேற்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com