விஜய் சேதுபதி-பூரி ஜெகன்நாத் படத்தில் நடிக்கிறீர்களா? - ராதிகா ஆப்தே பதில்


No Puri Jagannadh film with Vijay Sethupathi and Tabu, says Radhika Apte
x

பூரி ஜெகன்நாத் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிக்க இருப்பதாக கூறப்படும் தகவலை ராதிகா ஆப்தே நிராகரித்தார்.

சென்னை,

ராதிகா ஆப்தே நடித்த 'சிஸ்டர் மிட்நைட்' திரைப்படம் இறுதியாக இந்தியாவில் வெளியாக உள்ளது. பாப்டா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்த படம் இன்று திரைக்கு வருகிறது.

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய ராதிகா ஆப்தே, பூரி ஜெகன்நாத் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிக்க இருப்பதாக கூறப்படும் தகவலை நிராகரித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், "ஐயோ கடவுளே, இந்த செய்தி பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் இந்தப் படத்தில் நடிக்கவில்லை. இது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது' என்றார்.

"பிசினஸ்மேன், டெம்பர், லிகர், டபுள் இஸ்மார்ட்" உள்ளிட்ட படங்களை இயக்கிய பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். பான் இந்தியா அளவில் தயாராக உள்ள இப்படத்தை நடிகை சார்மி கவுர் தயாரிக்கிறார். இப்படத்தில் நடிகை தபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். ஜூன் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

1 More update

Next Story