''அப்துல் கலாமாக நடிக்க தனுஷை விட பொருத்தமானவர் யாரும் இல்லை'' - இயக்குனர் ஓம் ராவத்


Nobody better than Dhanush to play APJ Abdul Kalam in Kalam: The Missile Man of India - Director Om Raut
x

தனுஷ் நடிக்கும் ''கலாம்: தி மிசைல் மேன் ஆப் இந்தியா'' படத்தை ஓம் ராவத் இயக்குகிறார்.

சென்னை,

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க தனுஷை விட சிறந்தவர் யாரும் இல்லை என்று இயக்குனர் ஓம் ராவத்கூறி இருக்கிறார். ''கலாம்: தி மிசைல் மேன் ஆப் இந்தியா'' படத்தில் தனுஷுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், ''தனுஷ் ஒரு அற்புதமான நடிகர். அப்துல் கலாம் கதாபாத்திரத்தில் நடிக்க தனுஷை விட பொருத்தமானவர் யாரும் இருக்க முடியாது. அவர் அந்தப் பாத்திரத்தை ஏற்றுக்கொண்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த படத்தில் அவருடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்,'' என்றார்.

ஒரு விஞ்ஞானியாகவும் இந்திய ஜனாதிபதியாகவும் கலாமின் வாழ்க்கையைக் கூறும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது.

1 More update

Next Story