'எனது மகன் என்பதால் யாரும் அவரை... - இயக்குனர் கஸ்தூரி ராஜா


Nobody included him because hes my son... - Director Kasthuri Raja
x

இயக்குனர் கஸ்தூரி ராஜா, ஒரு படவிழாவில் செல்வராகவன் குறித்து பேசியது வைரலாகி வருகிறது.

சென்னை,

பிரபல இயக்குனரும் , தயாரிப்பாளருமானவர் கஸ்தூரி ராஜா. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், செல்வராகவன், நடிகர் தனுஷ் ஆகியோரின் தந்தையாவார். இந்நிலையில், இவர் செல்வராகவன் குறித்து ஒரு படவிழாவில் பேசியது வைரலாகி வருகிறது.

அதில் அவர் பேசுகையில்,

'செல்வராகவனை உதவி இயக்குனராக சேர்க்க பலரிடம் முயற்சி செய்தேன், ஆனால் எனது மகன் என கூறி அவரை யாரும் சேர்க்கவில்லை. வாரிசுகள் கட்டாயமாக சினிமாவிற்கு வர வேண்டுமென்ற அவசியம் இல்லை, ஆனால் தலையெழுத்து இருந்தால் வந்துதான் ஆக வேண்டும்' என்றார்.

1 More update

Next Story