‘அமைதிக்காக பேசுவது தவறா?’ - டிரோல்களை வெளுத்து வாங்கிய நடிகை

உலக அமைதி குறித்த தனது கருத்துகளை விமர்சித்தவர்களுக்கு நடிகை நோரா பதேஹி கடுமையாக பதிலளித்துள்ளார்.
‘அமைதிக்காக பேசுவது தவறா?’ - டிரோல்களை வெளுத்து வாங்கிய நடிகை
Published on

மும்பை,

பாலிவுட்டின் ‘டான்சிங் குவீன்’ என அழைக்கப்படும் நோரா பதேஹி, உலக அமைதி குறித்த தனது கருத்துகளை விமர்சித்தவர்களுக்கு கடுமையாக பதிலளித்துள்ளார்.

ஈரான்-இஸ்ரேல் இடையேயான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், உலக அமைதிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என நோரா சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார். ஆனால், இதற்காக சிலர் அவரை டிரோல் செய்தனர்.

Also Read
தேர்தலுக்கு பின் வெளியாகிறதா ஜனநாயகன்?
‘அமைதிக்காக பேசுவது தவறா?’ - டிரோல்களை வெளுத்து வாங்கிய நடிகை

இதற்கு பதிலளிக்கும் வகையில், புதிய வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், “ ஒற்றுமை மற்றும் உலக அமைதிக்கான எனது கருத்து உங்களை எரிச்சலடையச் செய்கிறது என்றால், உங்களுக்குதான் ஏதோ ஒரு பிரச்சினை இருக்கிறது.

நான் ஒரு குறிப்பிட்ட தரப்பிற்கு ஆதரவாகப் பேசவில்லை. தொடர்ந்து ஏற்படும் போர்கள் மற்றும் குழப்பங்களால் பாதிக்கப்பட்ட ஒட்டுமொத்த மக்களுக்காகவே பேசினேன். இந்த அச்சுறுத்தல்களுக்குப் பயந்து அமைதிக்காகக் குரல் கொடுப்பதை நிறுத்தப் போவதில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com