'இதற்கு முன்னால் இப்படி பார்த்திருக்க மாட்டார்கள்' - வீடியோ வெளியிட்டவரை சாடிய நடிகை

சமீபத்தில் இவரின் உடல் பாகத்தை வைத்து தவறாக சித்தரிக்கப்பட்ட வீடியோ வெளியானது.
image courtecy:instagram@norafatehi
image courtecy:instagram@norafatehi
Published on

மும்பை,

கனடாவில் பிறந்து வளர்ந்தவர் நோரா பதேகி. தற்போது மும்பையில் தங்கி இந்திய சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தி டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.

கடந்த 2014ம் ஆண்டு வெளியான ரோர்- டைகர்ஸ் ஆப் தி சுந்தர்பான்ஸ் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் நோரா பதேகி. எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடி உள்ளார்.

வம்சி பைடிபல்லி இயக்கத்தில் கார்த்தி நடித்த தோழா படத்தில் டோர் நம்பர் பாடலுக்கு குத்தாட்டம் போட்டவர் நோரா பதேகி தான். தற்போது அவர் பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். பெரும்பாலும் குத்துப் பாடல்களுக்கு ஆடி வருகிறார். குத்துப் பாட்டா கூப்பிடு நோராவை என்று இயக்குநர்கள் சொல்லும் அளவுக்கு நன்றாக டான்ஸ் ஆடுவார்.

சமீபத்தில் இவரின் உடல் பாகத்தை வைத்து தவறான வீடியோ வெளியானது. இந்நிலையில், நடிகை நோரா பதேகி வீடியோ பதிவிட்டவரை கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது,

'இதற்கு முன்னால் அவர்கள் இப்படி பார்த்திருக்க மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். எனக்கு மட்டும் இப்படி செய்கிறார்கள். ஏன் மற்ற நடிகைகளை இப்படி அவர்கள் செய்யவில்லை. ஒருவேளை அவர்களை இப்படி செய்தால் பெரிதாக பேசப்படாது என்று எண்ணி இப்படி தேவையில்லாமல் செய்கிறார்கள்.

துரதிர்ஷ்டவசமாக இவை சமூக ஊடகங்களில் டிரெண்ட் ஆகின்றன. அவர்கள் சமூக ஊடகங்களில் விளையாடுகிறார்கள். நான் ஒரு நல்ல உடலுடன் உள்ளேன், அதற்காக நான் வெட்கப்படவில்லை. ஒவ்வொரு நபரையும் பிடித்து அவர்களுக்கு பாடம் கற்பிக்க முடியாது.' இவ்வாறு பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com