

மும்பை
1994-ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற சுஷ்மிதா சென்,தமிழில் ரட்சகன் படத்தில் நடித்து பலரின் கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு தொடர்ந்து இந்தி படங்களில் நடித்து பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
46 வயதாகும் இவர் தற்போது வரை திருமணம் செய்துகொள்ளவில்லை. இருப்பினும் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல மாடலான ரோஹ்மான் ஷாவ்லுடன் காதல் உறவில் இருந்து வந்தார்.
ஆனால் கடந்த ஆண்டு இருவரும் பிரிந்ததையடுத்து, தான் தத்தெடுத்த இரண்டு குழந்தைகளை வளர்க்கும் பணிகளில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். இதனிடையே திரைப்படம் நடிப்பதில் இருந்து விலகியுள்ள் அவர், இரு சில வெப் தொடர்களில் மட்டும் நடித்து வருகிறார்.
தற்போது சுஷ்மிதா சென் தாலி(Taali) என்ற வெப் தொடரில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மும்பையில் வசிக்கும் சமூக ஆர்வலரும், திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் சவுரி சாவந்த் என்ற திருநங்கையின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இந்த தொடர் எடுக்கப்பட்டு வருகிறது. இதை தேசிய விருது பெற்ற ரவி ஜாதவ் இயக்கிறார்.
இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது சமூக வலைத்தளப் பகிர்ந்த சுஷ்மிதா சென், "இந்த அழகான நபரின் கதாபாத்திரம் மற்றும் அவரது கதையை உலகிற்கு கொண்டு வரும் வாய்ப்பு எனக்கு கிடைத்தை பெரும் பாக்கியமாக, பெருமையாகவும் கருதுகிறேன். வாழ்வதற்கும், கண்ணியத்துடன் வாழ்வதற்கும் அனைவருக்கும் உரிமை உண்டு" எனக் குறிப்பிட்டுள்ளார்.
சுஷ்மிதாவின் ரசிகர்கள் அவரது தாலி தோற்றத்தை விரும்பினாலும், சமூக ஊடக பயனர்களில் ஒரு பகுதியினர் கவுரியின் வேடத்திற்கு ஒரு உண்மையான திருநங்கையை நடிக்க வைக்காத்து ஏன் என கேள்வி எழுப்பி உள்ளனர்.
பலர் தங்கள் அதிருப்தியை தெளிவுபடுத்தி உள்ளனர். இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர், "இப்போது நேரம் நெருங்கிவிட்டதாக நான் நினைக்கிறேன், திருநங்கைகளுக்கும் நடிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். ஒரு நடிகையை தேர்ந்து எடுப்பதற்குப் பதிலாக, திருநங்கையை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க வேண்டும்" என்று கூறி உள்ளார்.
மேலும் ஒருவர் இந்தத் திட்டம் உண்மையில் சுவாரஸ்யமாகத் தோன்றினாலும், உண்மையான திருநங்கை-நடிகர் இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். இப்போது சுஷ்மிதா நடிக்கிறார், அவர் ஒரு அற்புதமான நடிகை என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
View this post on Instagram
ஸ்ரீகவுரி சாவந்த் யார்?
புனேவில் கணேஷ் என்ற பெயரில் பிறந்த ஸ்ரீகவுரி சாவந்த், இந்தியாவில் திருநங்கைகளின் உரிமைகளுக்காகப் போராடும் முன்னோடி திருநங்கைகளில் ஒருவர்.
சாகி சார் சவுகி என்ற அறக்கட்டளை, பாதுகாப்பான பாலினத்தை ஊக்குவிக்கிறது மற்றும் திருநங்கைகளுக்கு ஆலோசனை வழங்குகிறது, இது திருநங்கை ஆர்வலரால் 2000 இல் நிறுவப்பட்டது.
தேசிய சட்ட சேவைகள் ஆணைய வழக்கில் திருநங்கையை மூன்றாம் பாலினமாக அங்கீகரிப்பது தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பில் மனுதாரர்களில் இவரும் ஒருவர்.
மூன்றாம் பாலினத்தின் பாரம்பரிய உருவத்தை மீறி, அனாதை சிறுமியை பராமரிக்கும் திருநங்கை தாயாக சாவந்த் விக்ஸ் விளம்பரத்திலும் நடித்தார். அவர் கவுன் பனேகா குரோர்பதி வென்ற பணத்தில் கார்கருக்கு அருகில் பாலியல் தொழிலாளர்களுக்கு வீடுகளை கட்டி கொடுத்து உள்ளார்.
View this post on Instagram