டெல்லி கணேஷ் இடத்தை ஈடு செய்வது எளிதல்ல: கமல்ஹாசன்

மூத்த நடிகர் டெல்லி கணேசனோடு நான் செலவிட்ட தருணங்கள் இனியவை என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
டெல்லி கணேஷ் இடத்தை ஈடு செய்வது எளிதல்ல: கமல்ஹாசன்
Published on

சென்னை,

பிரபல தமிழ் நடிகர் டெல்லி கணேஷ் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்றிரவு காலமானார். சென்னை ராமாவரத்தில் உள்ள அவரது இல்லத்தில் டெல்லி கணேஷ் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், டெல்லி கணேஷ் மறைவுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,

"மூத்த நடிகர் டெல்லி கணேஷ் மறைந்தார் என்ற செய்தி பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது.நகைச்சுவையை நுட்பமாகக் கையாளும் அரிய குணச்சித்திர நடிகர். அவரது இடத்தை ஈடு செய்வது எளிதல்ல. அவரோடு நான் செலவிட்ட தருணங்கள் இனியவை; நினைவில் நிற்பவை.அண்ணன் கணேஷை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் மீது பற்று கொண்ட திரையுலக நண்பர்களின் வேதனையைப் பகிர்ந்து கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com