கார் ரேசிங் மட்டும் அல்ல… கிரிக்கெட்டிலும் அசத்தும் அஜித்குமார்!

நடிகர் அஜித்குமார் கிரிக்கெட் விளையாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கார் ரேசிங் மட்டும் அல்ல… கிரிக்கெட்டிலும் அசத்தும் அஜித்குமார்!
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், நடிகராக மட்டுமல்லாமல் கார் பந்தய வீரராகவும் கலக்கி வருவபவர். சர்வதேச அளவில் பல விருதுகளை பெற்றுள்ள அவர், தொடர்ந்து நடைபெறும் கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் ‘குட் பேட் அக்லி’ படத்தை வெளியானது. விரைவில், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் மீண்டும் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. தமிழக தேர்தலுக்கு வாக்களிக்க வந்த அஜித்குமார் தற்போது முழு ஓய்வில் இருந்து வருகிறார். தனது திருமண நாள் மற்றும் பிறந்தநாள் கொண்டாட்டங்களை மனைவி, மகன், மகளுடன் இணைந்து கொண்டாடிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த நிலையில், நடிகர் அஜித்குமார் கிரிக்கெட் விளையாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் அஜித் உற்சாகமாக விளையாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம், அஜித் கார் பந்தய வீரர் மட்டுமல்லாமல் கிரிக்கெட்டிலும் ஆர்வம் கொண்டவர் என அவரது ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com