தமிழும் ஆன்மீகமும் மட்டுமல்ல, பேச்சில் பண்பாடு காப்பதும் நம் கலாச்சாரமே -நடிகர் விவேக்

தமிழும் ஆன்மீகமும் மட்டுமல்ல,பேச்சில் பண்பாடு காப்பதும் நம் கலாச்சாரமே என நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி உள்ளார். #Vivekhactor #Vijayendrar
தமிழும் ஆன்மீகமும் மட்டுமல்ல, பேச்சில் பண்பாடு காப்பதும் நம் கலாச்சாரமே -நடிகர் விவேக்
Published on

சென்னை

சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோருடன் காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரர்  கலந்து கொண்டார். 

அந்த நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்ட போது அனைவரும் எழுந்து நின்றனர். அப்போது விஜயேந்திரர் மட்டும் கண்ணை மூடியபடியே தியானத்தில் அமர்ந்து இருந் தார். அதே விழாவில் தேசிய கீதம் பாடும் போது அவர் எழுந்து நின்று மரியாதை செலுத்தினார். 

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜயேந்திரரின் இந்த செயலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடந்து வருகின்றன. 

இது குறித்து நடிகர் விவேக தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:-

தமிழும் ஆன்மீகமும் மட்டுமல்ல,பேச்சில் பண்பாடு காப்பதும் நம் கலாச்சாரமே.கலங்கிய குட்டை தானே தெளியும்.அமைதி காப்போம். இறுதியில் அன்பே வெல்லும்.  மாணவர்களே உங்கள் படிப்புக்கு திரும்பங்கள் என கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com