தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு நோட்டீஸ்: அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட்டு கண்டனம்

ஐகோர்டின் தடையை மீறி அமலாக்கத் துறையினர் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு நோட்டீஸ்: அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட்டு கண்டனம்
Published on

சென்னை,

சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த மாச் மாதம் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினா. இதன் அடிப்படையில், தயாரிப்பாளா ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபா விக்ரம் ரவீந்திரன் ஆகியோரது வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையின்போது, லேப்டாப் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றிய அமலாக்கத் துறை அதிகாரிகள், விக்ரம் ரவீந்திரனின் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு 'சீல்' வைத்தனா. இதை எதித்து, சென்னை ஐகோர்ட்டில் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் தரப்பில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்ட மனுதாராகளுக்கு எதிராக அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை விதித்து கடந்த மாதம் உத்தரவிட்டது.

இதற்கிடையே, நேற்று சென்னை ஐகோர்ட்டில் மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணன் ஆகாஷ் பாஸ்கரன் தரப்பில் ஆஜரனார். அப்போது, மேல் நடவடிக்கைக்கு ஐகோர்ட்டு தடை விதித்த பின்னா, அமலாக்கத் துறை தீப்பாய அதிகாரி, கடந்த 11-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கை, கோர்ட்டை அவமதிக்கும் செயல். எனவே, இந்த நோட்டீசுக்கு தடை விதிக்க வேண்டும் என்று முறையீட்டார். பின்னர் அமலாக்கத்துறை தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அமலாக்கத்துறை வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், அமலாக்கத் துறை இதுபோல் செயல்பட்டதால்தான் இடைக்கால உத்தரவு பிறப்பித்தோம். கோர்ட்டு உத்தரவை மீறி அமலாக்கத் துறை செயல்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது" என்று கூறினர். மேலும் வழக்கின் விசாரணை வரும் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com