

சென்னை,
விஜய் - திரிஷா ஆகியோர் சமீபத்தில் ஒரு திருமண விழாவில் ஒன்றாக பங்கேற்றது விவாத பொருளானது. தவெக தலைவர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பானது.
சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு திருமண விழாவில் விஜய்யும், திரிஷாவும் ஒன்றாக பங்கேற்ற விவகாரம் சர்ச்சையானது. நடிகை திரிஷாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் ‘பன்ச்’ என்ற குரங்கை பற்றிய கதை பெரிதாக வைரலானது. அந்த குரங்கின் வாழ்க்கை சம்பவங்களும், அதற்கு பிறகு நடந்த மாற்றமும் பலரையும் உணர்ச்சி வசப்பட வைத்திருக்கிறது. சமீபத்தில் வைரலான "பன்ச்" என்ற குரங்கு தனது கூட்டத்தில் இருந்த மற்ற குரங்குகளால் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருந்ததாக கூறப்பட்டது. அதிலும் அதிர்ச்சியாக, அந்த குரங்கின் அம்மாவே அதை புறக்கணித்ததாகவும் தகவல்கள் பரவின. இதனால் அந்த குரங்கு தனியாகவே சுற்றித்திரிந்தது. அதைப் பார்த்த கவனிப்பாளர்கள், அதற்கு ஆறுதலாக ஒரு பொம்மையை கொடுத்துள்ளனர். அந்த பொம்மையை பன்ச் எங்கே சென்றாலும் கையில் தூக்கிக்கொண்டு திரிந்தது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
சமீபத்தில் அந்த குரங்கின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டதாக புதிய வீடியோக்கள் வெளியாகின. அதில், பன்ச் மற்றொரு பெண் குரங்குடன் நெருக்கமாக பழக ஆரம்பித்தது, அதற்காக மற்றொரு குரங்குடன் சண்டை போட்டு காப்பாற்றியது போன்ற காட்சிகள் வெளியானது.
இந்நிலையில் நடிகை திரிஷா இன்ஸ்டா ஸ்டோரி பதிவு வைரலாகியுள்ளது. ‘பன்ச்’ குரங்குக்கு புது தோழி கிடைத்திருக்கும் நிலையில், அதை காப்பாற்ற மற்றொரு குரங்குடன் ‘பன்ச்’ சண்டை போட்ட லேட்டஸ்ட் வீடியோவுக்கு தான் திரிஷா கமெண்ட் செய்து இருக்கிறார். அதில் "Now that's a gentleman 💪❤️" என்று கமெண்ட் செய்துள்ளார்.