இனி மறைப்பதற்கு என்னிடம் ஒன்றும் இல்லை - நடிகை ராதிகா ஆப்தே

இனி மறைப்பதற்கு என்னிடம் ஒன்றும் இல்லை.அதை வைத்து யாராலும் செய்தி வெளியிட முடியாது என நடிகை ராதிகா ஆப்தே கூறி உள்ளார். #RadhikaApte
இனி மறைப்பதற்கு என்னிடம் ஒன்றும் இல்லை - நடிகை ராதிகா ஆப்தே
Published on

மும்பை

கபாலி படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்து பிரபலமான ராதிகா ஆப்தே சர்ச்சை கருத்துக்கள் வெளியிட்டு அடிக்கடி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.

சமீபத்தில் தென்னிந்திய மொழி படமொன்றில் நடித்தபோது அந்த படத்தின் கதாநாயகன் தனது கால்களை உரசி செக்ஸ் தொல்லை கொடுத்ததாகவும் அவரை நான் அறைந்து விட்டேன் என்றும் அதிர்ச்சி தகவலை கூறி இருந்தார்.

அந்த நடிகர் யார் என்று சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் நடந்து வருகிறது. ராதிகா ஆப்தேவிடம் அடி வாங்கியது தெலுங்கு நடிகர் என்று கூறப்படுகிறது. சினிமா வாய்ப்பு தேடும் நடிகைகளுக்கு செக்ஸ் தொல்லைகள் இருப்பதாகவும் ராதிகா ஆப்தே தெரிவித்தார். இந்தி படங்களில் அரைகுறை உடையில் ஆபாசமாகவும் நடித்து வருகிறார்.

என்ன நடந்தாலும் சரி இனி தெலுங்கு படங்களில் மட்டும் நடிக்கவே கூடாது என்ற முடிவில் உள்ளார். தெலுங்கு படத்தில் நடிக்கும்போது ஏற்பட்ட மோசமான அனுபவத்தால் அந்த முடிவுக்கு வந்துவிட்டார்.

2015ம் ஆண்டில் ராதிகா ஆப்தே அனுராக் கஷ்யப் இயக்கிய மேட்லி குறும்படத்தில் நிர்வாணமாக நடித்த புகைப்படம் ஆன்லைனில் கசிந்து சமூக வலைதளங்களில் வைரலானது. வாட்ஸ்ஆப்பில் அந்த புகைப்படம் தீயாக பரவியது. அதன் பிறகு 2016ம் ஆண்டில் பார்ச்ட் படத்தில் ராதிகா ஆப்தே ஆதில் ஹுசைனுடன் நடித்த படுக்கையறை காட்சிகள் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தின.

நிர்வாண புகைப்படம், படுக்கையறை காட்சி என்று அடுத்தடுத்து லீக்காகி சர்ச்சையில் சிக்கினார் ராதிகா ஆப்தே. வெளிநாடுகளில் எல்லாம் நிர்வாணமாக நடிப்பது சகஜம். கலையை பாருங்கள், உடையை பார்க்காதீர்கள் என்று விளக்கம் அளித்தார் ராதிகா.

இன்டர்நெட்டில் கசிந்த புகைப்படங்கள் குறித்து ராதிகா ஆப்தே தற்போது மீண்டும் பேட்டி அளித்துள்ளார். பேட்டியின்போது அவர் கூறியதாவது:-

என் நிர்வாண புகைப்படங்கள் கசிந்துவிட்டதாக என் அம்மா முதலில் கூறினார். அந்த புகைப்படங்களை அவருக்கு யாரோ வாட்ஸ்ஆப்பில் அனுப்பியுள்ளனர். இரண்டாவது முறை என் கார் டிரைவர் கூறினார் . இதற்கு நான் ஒன்று செய்ய முடியாது.

என் நிர்வாண புகைப்படங்கள் ஏற்கனவே கசிந்து வைரலாகிவிட்டன. இனி மறைப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை. நான் எது வேண்டுமானாலும் செய்யலாம். அதை வைத்து யாராலும் செய்தி வெளியிட முடியாது என்று கூறி சிரித்தார் ராதிகா.

ஆங்கில படம் ஒன்றில் நடித்து முடித்துள்ள ராதிகா தற்போது இந்தி படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com