''ஜூனியர் என்.டி.ஆருக்கு அது தேவையில்லை'' - ஹிருத்திக் ரோஷன்

வருகிற 14-ம் தேதி “வார் 2” படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
மும்பை,
"வார் 2" திரைப்படத்தின் மூலம் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். பிளாக்பஸ்டர் படமான "வார்"-ன் தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் இதில் கியாரா அத்வானி, ஹிருத்திக் ரோஷனுடன் அவர் நடித்திருப்பது அதிக கவனத்தை பெற்றுள்ளது.
இரண்டு நட்சத்திரங்களுக்கிடையேயான மோதல் காட்சி படத்தின் மிகப்பெரிய சிறப்பம்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற 14-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படக்குழு புரமோசன் பணிகளை தொடங்கியுள்ளது.
அதன்படி, சமீபத்திய நேர்காணலில், ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆரை பாராட்டினார். அவருடன் பணிபுரிவது "நம்பமுடியாத அனுபவம்" என்று கூறினார். மேலும், அவருக்கு ஒத்திகை கூட தேவையில்லை எனவும் ஹிருத்திக் கூறினார்.
Related Tags :
Next Story






