செவிலியர்களின் சீருடையை மாற்ற வேண்டும்: கங்கனா ரணாவத் யோசனை

‘பாரத் பாக்ய விதாதா’ என்ற திரைப்படத்தில் நடிகை கங்கனா ரனாவத் செவிலியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
செவிலியர்களின் சீருடையை மாற்ற வேண்டும்: கங்கனா ரணாவத் யோசனை
Published on

கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26 அன்று மும்பை பயங்கரவாத தாக்குதலின் போது, அங்கிருந்த காமா மருத்துவமனை ஊழியர்கள் காட்டிய வீரம் ஈடு இணையற்றது. அந்த இக்கட்டான சூழலில் சுமார் 400 உயிர்களைக் காப்பாற்றிய செவிலியர்கள், வார்டு பாய்ஸ் மற்றும் பாதுகாப்பு ஊழியர்களின் தியாகத்தை மையமாக வைத்து ‘பாரத் பாக்ய விதாதா’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. செவிலியர்களின் இந்த தியாகத்தை மையமாக வைத்து ‘பாரத் பாக்ய விதாதா’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் செவிலியர் கதாப்பத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஜூன் 12 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படம் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய கங்கனா ரனாவத் கூறியதாவது:

மருத்துவத் துறையில் செவிலியர்கள் மிக முக்கிய பங்காற்றினாலும், அவர்களுக்கு உரிய அங்கீகாரமும் மரியாதையும் கிடைப்பதில்லை. செவிலியர்களின் தற்போதைய சீருடை இன்னும் ஆங்கிலேயர் காலத்து தாக்கத்தை அதிகமாக கொண்டிருக்கிறது.. தொப்பி, பின், பெல்ட் போன்றவை வெளிநாட்டு பாணியை ஒத்திருப்பது போல உள்ளது இந்திய தட்பவெப்ப நிலைக்கு இந்த உடை பொருந்துவதில்லை. எனவே செவிலியர்களின் சீருடையை இந்தியமயமாக்க வேண்டும். குறைவான ஊதியம், அதிக வேலைப்பளு எனப் பல்வேறு இன்னல்களுக்கு இடையிலும் செவிலியர்கள் பணியாற்றுகின்றனர். நோயாளிகளைச் சுத்தம் செய்வது முதல் மருத்துவமனை சீராக இயங்குவது வரை பல முக்கிய பணிகளை செவிலியர்கள் செய்கின்றனர். இந்த படம் வெளியான பிறகு ஒரு சில நிமிடங்களாவது அவர்களைப் பற்றிய மக்களின் பார்வை மாறினால் அதுவே பெரிய வெற்றியாகும்’ என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com