

மும்பை,
நடிகை ஸ்ருதி ஹாசன், தனது பெயர், படம், உருவம், குரல் மற்றும் ஆளுமை உரிமைகளைப் பாதுகாக்க கோரி மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தனது மனுவில், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மற்றும் டீப்பேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது முகத்தை மார்பிங் செய்து ஆபாசமான மற்றும் விரும்பத்தகாத புகைப்படங்கள், வீடியோக்கள் உருவாக்கப்பட்டு இணையத்தில் பரப்பப்படுவதாக ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது அனுமதியின்றி பெயர் மற்றும் படத்தைப் பயன்படுத்தி ஆன்லைனில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதுடன், போலி விளம்பரங்களும் வெளியிடப்படுவதாக அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு தனது அடையாளத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தியவர்களிடம் இருந்து ரூ.15 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும், இதுபோன்ற செயலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ஸ்ருதி ஹாசன் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.