ஆபாசம் அதிகமாகிறது.. பாலிவுட் சினிமாவுக்கு கடிவாளம் தேவை- கங்கனா ரணாவத் கண்டனம்

பாலிவுட் சினிமா கவர்ச்சி தாண்டி ஆபாசம் என்ற எல்லையையும் மீறி வருகிறது கண்கூடாகவே தெரிகிறது.

ஆபாசம் அதிகமாகிறது.. பாலிவுட் சினிமாவுக்கு கடிவாளம் தேவை- கங்கனா ரணாவத் கண்டனம்
Published on

பிரேம் இயக்கி துருவ் சார்ஜா, சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி, நோரா படேஹி நடித்துள்ள 'கே.டி. தி டெவில்' என்ற படம் விரைவில் திரைக்கு வருகிறது. இதில் சஞ்சய் தத் - நோரா படேஹி இடம்பெறும் 'சர்கே சுனார் தேரி சர்கே' என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. இதில் இடம்பெற்றுள்ள வரிகள் பாலியல் சார்ந்த விஷயங்களை குறிப்பதால் கண்டனங்களும் எழுந்து வருகின்றன. இதற்கிடையில் இந்த பாடலுக்கு நடிகையும், எம்.பி.யுமான கங்கனா ரணாவத் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

அவர் கூறும்போது, பாலிவுட் சினிமா கவர்ச்சி தாண்டி ஆபாசம் என்ற எல்லையையும் மீறி வருகிறது கண்கூடாகவே தெரிகிறது. இதெல்லாம் தவறு என்று தோன்றவில்லையா... நாடு முழுவதும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

ஆபாசமான, அருவறுக்கத்தக்க விஷயங்களை மக்கள் பார்க்கும் சினிமா வழியாக சொல்வது தவறில்லையா... இதற்கெல்லாம் கட்டுப்பாடுகள் வேண்டாமா... என்னை பொறுத்தவரை பாலிவுட் சினிமாவுக்கு கடுமையான கடிவாளம் போட வேண்டும் என்றுதான் சொல்வேன்", என்று குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com