நடிகரின் மனைவி தாக்கிய நடிகையிடம் போலீஸ் விசாரணை

ஒடியா நடிகர் பாபுசன் மொகந்தியுடன் காருக்குள் இருந்த நடிகை பிரக்ருதி மிஸ்ராவை நடிகர் மனைவி திருப்தி சதபதி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகரின் மனைவி தாக்கிய நடிகையிடம் போலீஸ் விசாரணை
Published on

பிரபல ஒடியா நடிகர் பாபுசன் மொகந்தி. இவர் சில தினங்களுக்கு முன்பு ஒடியா இளம் நடிகை பிரக்ருதி மிஸ்ராவுடன் காரில் அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு வந்த பாபுசன் மொகந்தியின் மனைவி திருப்தி சதபதி காருக்குள் தனது கணவருடன் பிரக்ருதி மிஸ்ரா ஒன்றாக இருப்பதை பார்த்து இருவருக்கும் தகாத உறவு இருப்பதாக ஆத்திரம் அடைந்தார்.

பிரக்ருதியை வெளியே இழுத்து சரமாரியாக அடித்தார். அவரிடம் இருந்து தப்பி ஓடிய பிரக்ருதியை பின்னால் விரட்டி சென்று 'என் குடும்பத்தை நாசம் செய்து விட்டியே' என்று கத்தியபடி தாக்கினார்.

இந்த வீடியோ வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பிரக்ருதி மிஸ்ரா தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பதிலுக்கு திருப்தியும் பிரக்ருதி மீது புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து பிரக்ருதியிடம் அவரது வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். பிரக்ருதி பெற்றோர் முன்னிலையில் ஒருமணி நேரம் இந்த விசாரணை நடந்தது.

நடிகர் பாபுசனுடன் உள்ள உறவு குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பி விசாரித்தனர். திருப்தி சதபதி அளித்த புகாரின்பேரில் இந்த விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது. விசாரணை விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com