பிரபல நடிகையின் அந்தரங்க வீடியோவை வெளியிட்ட சினிமா தயாரிப்பாளர்..!

வேறொரு தயாரிப்பாளரின் படத்தில் நடிக்க சென்றதால் பிரபல நடிகையின் அந்தரங்க வீடியோவை வெளியிட்ட மற்றொரு தயாரிப்பாளர்..!
பிரபல நடிகையின் அந்தரங்க வீடியோவை வெளியிட்ட சினிமா தயாரிப்பாளர்..!
Published on

புவனேஸ்வர்

பிரபல ஒடிசா பட தயாரிப்பாளர் ஒருவர் வேறு ஒரு தயாரிப்பாளரின் படத்தில் நடிக்க சென்றதால் தன்னுடன் உறவில் இருந்த நடிகையின் அந்தரங்க வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு உள்ளார். இது தொடர்பாக நடிகை தரப்பில் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஒடிசாவை சேர்ந்த பிரபல நடிகை ஒருவர், புவனேஸ்வரில் உள்ள லட்சுமிசாகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், "நான் சினிமா தயாரிப்பாளர் ஒருவருடன் நெருங்கி பழகி வந்தேன். அவர் என்னுடன் நெருக்கமாக இருந்தபோதெல்லாம், வீடியோக்கள், போட்டோக்களை எடுத்து கொள்வார்.

அப்போது அதற்கான காரணம் என்னவென்று எனக்கு தெரியவில்லை. அவரது உள்நோக்கமும் அறியவில்லை. ஆனால், அவரை நான் முழுமையாக நம்பினேன். இதன்காரணமாக, அவருடன் நான் சினிமாவில் பணிபுரிந்ததற்கான பணத்தையும் எனக்கு அவர் தரவில்லை. நானும் அதை வற்புறுத்தி கேட்கவில்லை. நாளுக்கு நாள், எங்களின் உறவு மோசமாக ஆரம்பித்து. அவர் என்னை அசிங்கப்படுத்த துவங்கினார். சினிமா துறையில், என்னுடைய பெயரை கெடுக்கவும் செய்தார்.

இந்த நிலையில் நாங்கள் ஒன்றாக இருந்தபோது எடுத்த, அத்தனை அந்தரங்க வீடியோக்கள், போட்டோக்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு உள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் நடிகை கூறியிருந்தார்.

இந்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட சினிமா தயாரிப்பாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையும் துவக்கி உள்ளனர்.

தயாரிப்பாளரும் நடிகையும் சில வருடங்கள் ஒரே வீட்டில் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தனர். நடிகை வேறொரு தயாரிப்பாளரின் படத்தில் நடிக்க சென்றதால் நடிகையின் அந்தரங்க புகைபடங்கள் மற்றும் வீடியோவை தயாரிப்பாளர் வெளியிட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com