பவன் கல்யாண் நடிக்கும் 'ஓஜி' படத்தின் ஓ.டி.டி உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்

'ஓஜி' படம் ஓடிடியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்லது.
பவன் கல்யாண் நடிக்கும் 'ஓஜி' படத்தின் ஓ.டி.டி உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்
Published on

சென்னை,

பவர் ஸ்டார் பவன் கல்யாண் அரசியல்வாதியும், தெலுங்கு சினிமாவின் முன்னனி நடிகரும் ஆவார். இவர் தெலுங்கு சினிமாவில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். இவர் தற்போது, இயக்குனர் சுஜீத் இயக்கத்தில் 'ஓஜி' என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி, பிரகாஷ் ராஜ், ஸ்ரீயா ரெட்டி, அர்ஜுன் தாஸ், ஷாம் மற்றும் ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். டி.வி.வி என்டர்டெயின்மென்ட்டின் கீழ் டி.வி.வி தனய்யா தயாரிக்கிறார். மேலும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.

ஆரம்பத்தில், இந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றது. பின்னர் ஒரு சில காரணத்தால் படப்பிடிப்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டது. தற்போது இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படாதநிலையில், ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியான பின்பு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com